Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

45 நாடுகள்... 115 நாள்கள்... வெளிநாட்டுப் பயணங்களில் என்ன செய்தார் மோடி? #3yearsofmodi #ModiFest #VikatanStoryMap

மோடி

ந்தியப் பிரதமர் மோடி பதவிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிறது. இந்தியாவின் வளர்ச்சி, பொருளாதாரம், அரசியல் சூழல் என்று பல்வேறு விஷயங்கள் மோடியின் ஆட்சியில் வளர்ந்ததா? இல்லையா? என்பதெல்லாம் ஒரு பக்கம் விவாதிக்கப்பட்டாலும், மோடி மீது சாமானிய மக்களும் வைக்கும் விவாதங்களில் ஒன்று அதிகப்படியான வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்கிறார் என்பது தான். 45 நாடுகள், 115 நாள்கள் மூன்று வருடங்களில் மோடியின் வெளிநாட்டுப் பயண விவரம்.

எங்கு சென்றார், என்ன பேசுகிறார் என்பதெல்லாம் தாண்டி.. தமிழகத்தில் ஜெயலலிதா பிரசாரம் செய்தால் குட்டிக்கதையோடு தான் பேசுவார். அதேபோல், தான் மோடியும் அந்த ஊரில் மக்களை எப்படி கவர வேண்டுமோ...அதை அறிந்து மேற்கோள் காட்டி பேசுவதில் கைதேர்ந்தவர். அந்த ஊரின் கலாசார உடையை அணிவது, ட்ரம்ஸ் வாசிப்பது, பழங்குடினர் போல் வேடமணிவது என மோடியின் மேஜிக் ஜாலங்கள் எல்லா ஊரில் அரங்கேற்றமாகின. செல்ஃபி எடுப்பார், ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பதிவிட்டு லைக்ஸ் வாங்குவார். இதற்காக மட்டுமே செல்லவில்லை என்றாலும், அவரது பயணத்தைக் கவனித்தால் கிடைக்கும் தகவல்கள் ஆச்சர்யமளிக்கின்றன.

மோடியின் பெரும்பாலான வெளிநாட்டு பயணங்கள் இந்தியாவின் கோடைகாலங்களில் இருந்துள்ளன. குறிப்பாக மார்ச்சுக்கும் - ஆகஸ்ட்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மோடி அதிக பயணங்களை மேற்கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல்,  ஜனவரி, பிப்ரவரியில் வெளிநாட்டு பயணமே செய்யாமல் இருந்துள்ளார். இந்தியாவில் குளிரை அனுபவிக்கும் மோடி? இந்தியாவின் வெப்பத்தை மறுக்கிறாரோ? இன்னும் இரண்டு வருடங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும்... இந்தியாவில் மட்டுமல்ல மோடிக்கும் தான்....

 

 

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close