Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராணுவத்துக்கு எதிராக கொடியேறி பாலகிருஷ்ணன் சர்ச்சை கருத்து

ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டால், அப்பாவி பெண்கள் கடத்தப்படுவதும் பாலியல் பலாத்காரம் செய்யவும் வாய்ப்புள்ளது என சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கொடியேறி பாலகிருஷ்ணன்.

பாலா

ராணுவத்தினருக்கு பதற்றமான சூழல்களில் முழு சுதந்திரம் வழங்கப்படுவதாக நேற்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். மேலும், இக்கட்டான சூழ்நிலைகளைக் கையாளும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ராணுவம் ஆலோசனை கேட்கவேண்டிய தேவையில்லை" என்று அவர் தெரிவித்தார். அண்மையில் ஜீப்பில் இளைஞரை கட்டி வைத்து சென்ற ராணுவ வீரருக்கு விருது வழங்கப்பட்டதையடுத்து அவர் இவ்வாறு கூறினார்.

இதனிடையே, அருண் ஜெட்லியின் கருத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் கேரளா மாநிலம் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கொடியேறி பாலகிருஷ்ணன். இது குறித்து அவர் கூறுகையில், 'முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டால், ராணுவத்தினர் எதையும் செய்வார்கள். 4 பேரை ஒன்றாக கண்டால், சுட்டுக்கொல்லவும் தயங்க மாட்டார்கள். மேலும் அப்பாவிப் பெண்கள் கடத்தப்படவும் பாலியல் பலாத்காரம் செய்யவும் வாய்ப்புள்ளது' என அவர் கூறினார்.

பாலகிருஷ்ணனின் இந்தக் கருத்துக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close