Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சோனியாவுக்கு நோ..மோடியுடன் மீட்டிங்! பீகார் முதல்வரின் திடீர் மாற்றம்

சோனியா காந்தியின் அழைப்பை நிராகரித்துவிட்டு மோடியை சந்திக்கவிருக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்.

நிதிஷ்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திப்பதாக அறிவித்துள்ளது. பொதுவான மதச்சார்பற்ற வேட்பாளரை களமிறக்குவது குறித்து பாஜகவுக்கு எதிரான கட்சிகள் விவாதித்து வருகின்றன. பாஜக தரப்பில் இதுவரை யார் பெயரும் உறுதி செய்யப்படவில்லை.

இதனிடையே இன்று சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிப்பதாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த விவாதத்தில் கலந்து கொள்வதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்கவிருந்த ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் கடைசி நேரத்தில் விலகியுள்ளார். மேலும், நாளை மொரீஷியஸ் பிரதமருடன் மோடி கலந்துகொள்ளும் விருந்தில் அவர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜனாதிபதி தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை நிதிஷ்குமார் மாற்றிக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close