Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இளைஞர்கள் இதைப் பின்பற்றுங்கள்...' : மோடி அட்வைஸ்!

பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும், கடைசி ஞாயிற்றுக்கிழமையில், 'மன் கி பாத்' ரேடியோ நிகழ்ச்சி மூலம், மக்களிடம் உரையாடி வருகிறார். இந்நிலையில், 32-வது மன் கி பாத் நிகழ்ச்சியில், அவர் இன்று உரையாடினார்.

Modi


அதில் அவர்,"புனித ரம்ஜான் மாதம் தொடங்கியுள்ளது. இதற்காக, உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய நாட்டின், மத பன்முகத்தன்மையைக் கண்டு பெருமைப்பட வேண்டும். இங்கு மட்டும்தான், அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் சுதந்திரமாக இருக்கிறார்கள். நாட்டின் பன்முகத்தன்மைதான் நமக்கு பலம். கடந்த முறை நான் பேசிய போது, விடுமுறையில் புதிதாக ஏதாவது செய்து பார்க்கச் சொன்னேன். மக்கள் அவர்களது அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துள்ளனர். இது மகிழ்ச்சியளிக்கிறது. இன்று வீர சாவர்க்கரின் பிறந்தநாள். தேசத்துக்காக, அவரது பங்களிப்பு விலை மதிப்பற்றது.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் குறித்து அறிவதில், இளைஞர்கள் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது. சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நடவடிக்கைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும். வருகின்ற ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் மட்டுமல்லாமல் அனைத்து தினங்களிலும், சுற்றுச்சூழல்  மீது அக்கறை  கொள்ள வேண்டும். 

ஜூன் 21ஆம் தேதி உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதில் அனைத்து மக்களும் கலந்து கொள்ள வேண்டும். யோகா ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close