Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீர் போரை கையாள புதிய உத்திகள் வேண்டும்... ராணுவத் தளபதி அதிரடி!

காஷ்மீரில் நடக்கும் மறைமுகப் போரை புதிய உத்திகளைக்கொண்டுதான் கையாள வேண்டும் என ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

bipin

காஷ்மீரில், இளைஞர் ஒருவரை ராணுவ வீரர் கோகாய் ஜீப்பில் கேடயமாகக் கட்டிச் சென்றது, நாடு முழுவதும் விவாதங்களைக் கிளப்பியது. அந்த ராணுவ வீரரின் செயலைப் பாராட்டி விருது வழங்கப்பட்டதும் விவாதத்துக்குள்ளாக்கப்பட்டது. இதனிடையே இந்த விவகாரம்குறித்து, ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் செய்தியாளர்களுக்குப் பதிலளித்தார்.

அப்போது, 'காஷ்மீரில் மறைமுகப் போர் நடக்கிறது. மோசமான வழியில் நடக்கும் இந்தப் போரை, புதிய உத்திகளைக்கொண்டுதான் கையாள வேண்டும்' என அவர் கூறியுள்ளார். ராணுவ அதிகாரி கோகாய், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்க முடியும். அவர் அப்படிச் செய்யாமல், போராட்டக்காரரை ஜீப்பில் கட்டிச்செல்லும்படி உத்தரவிட்டுள்ளார். சுய பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ராணுவத்தினருக்கு உரிமை உண்டு' என பிபின் ராவத் கூறியுள்ளார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close