Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறுநீர் கழித்ததைத் தட்டிக்கேட்டு உயிரிழந்த ரிக்‌ஷா ஓட்டுநர்... வெங்கைய நாயுடு கண்டனம்!

டெல்லியில், பொது இடத்தில் சிறுநீர் கழித்ததைத் தட்டிக் கேட்டதற்காக கொலை செய்யப்பட்ட ரிக்‌ஷா ஓட்டுநரின் குடும்பத்துக்கு 50,000 ரூபாய் நிதியுதவி அளித்தார் வெங்கைய நாயுடு.


வெங்கைய

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில், இன்று இரண்டு பேர் மது அருந்திவிட்டு அங்கு சிறுநீர் கழித்துள்ளனர். அதைக் கண்ட ரிக்‌ஷா ஓட்டுநர் ரவீந்தர், 'அங்கு சிறுநீர் கழிக்கக்கூடாது' என அவர்களைக் கண்டித்துள்ளார். அதற்கு அந்த இருவரும், 'உன்னைப் பிறகு பார்த்துக்கொள்கிறோம்' என்று ரிக்‌ஷா ஓட்டுநரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து, இரவு சுமார் 10 பேர்களுடன் வந்த அவர்கள், ரவீந்தரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில், ரவீந்தர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதனிடையே, இன்று மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, உயிரிழந்த ரவீந்தரின் உறவினரைச் சந்தித்து ரூபாய் 50,000 நிதியுதவி அளித்தார். இதுகுறித்து பேசிய அவர், ''ஊடகங்களில் இந்தச் செய்தியைக் கண்ட பின் மிகவும் வருத்தமடைந்தேன். இதுபோன்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். மேலும் டெல்லி போலீஸிடம் விசாரணையைத் துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன்'' எனக் கூறியுள்ளார். காவல்துறை தரப்பில் சிசிடிவி கேமரா பதிவுகளைக்கொண்டு குற்றவாளிகளைப் பிடிக்கும் பணி நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம்குறித்து பிரதமர் மோடியும் கண்டனங்களைப் பதிவுசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close