Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரபல தெலுங்குப் பட இயக்குநர் தாசரி நாரயண ராவ் மறைவுக்கு ரஜினி, கமல் உள்ளிட்டோர் இரங்கல்!

தெலுங்குத் திரைப்பட உலகின் பிரபல இயக்குநர் தாசரி நாராயண ராவ், உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு ரஜினி, கமல் ஆகியோர் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

dasari narayana rao


தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் அதிகப் படங்களை இயக்கியுள்ள  தாசரி நாராயண ராவ், அதிகப் படங்களை இயக்கியவர் என 'லிம்கா' சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற பெருமைக்குரியவர். பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், வசனகர்த்தா எனப் பன்முகத் தன்மைகொண்டவர், தாசரி. மேலும், காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். தெலுங்குப் பட உலகின் பெரிய இழப்பாகவே இவரது மறைவு கருதப்படுகிறது. 


நுரையீரல் தொற்றுநோயால் அவதிப்பட்டுவந்தவர், சிகிச்சை பலனின்றி மறைந்தார். சமீபத்தில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறுகுறித்த திரைப்படம் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், அவர் எதிர்பாரா விதமாக அவர் உயிரிழந்துவிட்டார்.


இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ரஜினி, கமல் மற்றும் தெலுங்குத் திரைப்பட உலக  முன்னணிப் பிரபலங்கள் தங்கள் வருத்தத்தை ட்விட்டரில் பதிவுசெய்துள்ளனர். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close