Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

1.71 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிய இந்திய நிறுவனங்கள்..! ஆனால், இந்தியர்களுக்கு வேலை இல்லை

ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒன்பது நாடுகளில், இந்திய நிறுவனங்கள் சுமார் 1.71 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஆனால், இந்த நிறுவனங்களில் இந்தியர்கள் பணியாற்றுவதற்கு, அந்தந்த நாடுகள் விசா வழங்குவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றன என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 


சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில், இந்திய நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இந்த நிறுவனங்கள், அந்த நாடுகளில் 1.71 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. இன்போஸிஸ், டி.சி.எல், எச்.சி.எல், விப்ரோ உள்ளிட்ட இந்திய ஐடி நிறுவனங்கள், அந்த நாடுகளில் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. ஆனால், அந்த நாடுகளில் இந்தியர்கள் பணியாற்றுவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 

 

 

சமீபத்தில், ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் விசா வழங்குவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கோமிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்திய நிறுவனங்கள் 60,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. ஆனால், வெளிநாட்டவருக்கு 5 சதவிகிதம் மட்டுமே வேலைக்கான விசாக்களை பிலிப்பைன்ஸ் வழங்குகிறது. ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் விசாக்களை எளிதாக அளிப்பதை இந்தியா உறுதிசெய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close