Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாட்டிறைச்சித் தடைக்குக் கேரள உயர் நீதிமன்றம் கொடுத்த அசரவைக்கும் விளக்கம்!

கேரள உயர்நீதிமன்றம்

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு தடைச் சட்டம் கொண்டு வந்தது. இதையடுத்து, இறைச்சிக்காக எருமை மாடு, பசு, காளை, ஒட்டகம் ஆகியவற்றை விற்பதற்கான தடை அமலுக்கு வந்தது. மேலும், விவசாயக் காரணங்களுக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் சட்டத்தில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்தது மத்திய அரசு.

இதை எதிர்த்து மதுரைக் கிளை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்த நான்கு வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

இதைப் போன்ற ஒரு வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிமன்றம், 'மத்திய அரசு கால்நடைகளைக் கொல்லவே கூடாது என்று கூறவில்லை. மாறாக, சந்தைகளில் கால்நடைகள் வெட்டப்படுவதற்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டத் திருத்தத்தில், வீடுகள் மற்றும் பிற இடங்களில் கால்நடைகள் வெட்டப்படுவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. இதனால் தனி மனித உரிமை மீறப்படவில்லை. சட்டத் திருத்தைப் படிக்காமலேயே மக்கள் எதிர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரைக் கிளை சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பானது மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கின்றது' என்று கூறியுள்ளது. 

மேலும், இந்தப் புதிய தடை சட்டத்தால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாட்டிறைச்சி விற்கும் வியாபாரிகள் தொடுத்த வழக்கு கேரள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close