Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பசுவைத் தேசிய விலங்காக அறிவியுங்கள்! - மோடிக்குக் காங்கிரஸ் திடீர் கோரிக்கை

மாட்டிறைச்சித் தடை விவகாரத்தில், ஒவ்வொரு நாளும் பல தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. இதில், தற்போது குஜராத் இளைஞர் காங்கிரஸாரும் இணைந்துள்ளனர். 

மாட்டிறைச்சி விவகாரம்


மாடுகளை உணவாக உண்ண, விற்பனை செய்யக்கூடாது. மேலும், மாட்டிறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்துள்ளது மத்திய அரசு. இதைப் பலர் எதிர்த்தும், ஆதரித்தும் கருத்து வெளியிட்டுவந்தனர். சமீபத்தில், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், ’பசுவைக் கொன்றால், ஆயுள் தண்டனை விதிக்க வேண்டுமென்றும் பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டுமென்றும்’ கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், தற்போது குஜராத் இளைஞர் காங்கிரஸார், ‘பிரதமர் மோடி பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும். இதற்காக நாங்கள் ஒரு இயக்கமே உருவாக்கவுள்ளோம். அதில், பசுவுக்கு ஆதரவாக இருக்கும் அத்தனை பேரும் வந்து இணைய வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பசுக்களைவைத்து அரசியல் செய்ய வேண்டாம். தொழிற்சாலைகளுக்காக ஏக்கர் கணக்கில் பசுமை நிலங்களை அளித்த பா.ஜ.க அரசுக்கு, பசுவைக் காக்க அந்த நிலங்களில் விளையும் புல் வேண்டுமெனத் தெரியவில்லை. இன்னும் பல இடங்களில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்பனை நடைபெற்றுதான் வருகின்றன. இதனால், அனைத்துத் தரப்பினரும் பசுவை வைத்து அரசியல் செய்வதை விடுத்து, பசுவைக் காக்க ஒன்றிணைவோம்’ என்று கூறியுள்ளனர்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close