Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

15 ரூபாயில் இன்ஷுரன்ஸ்..! பயண பாதுகாப்பு நடைமுறைகள்

பஸ் அல்லது ரயில் டிக்கெட் வாங்குவதற்கு பல கிலோ மீட்டர் வண்டியில் சென்று, கால் கடுக்க நின்று டிக்கெட் வாங்குவது கடினமான காரியமாக இருந்தது, இருக்கிறது. ஆனால், இப்போது நம் வீட்டில் இருந்தபடியே ஓரிரு நிமிடத்தில் ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட் போன்றவற்றை ஆன்லைன் மூலம் எளிதாக புக் செய்து வருகிறோம். ஆனால், என்னதான் எளிதாக, உடனடியாக ஆன்லைனில் பஸ் டிக்கெட்டை புக் செய்தாலும், நம்மில் பலர் நம்முடைய பயணத்தின் போது `டிராவல் இன்ஷுரன்ஸ்' பற்றி யோசிப்பதே இல்லை.

டிராவல் இன்ஷுரன்ஸ்

டிராவல் இன்ஷூரன்ஸ்! 

பேருந்தில் சொந்த ஊருக்கோ, உறவினர் வீட்டுக்கோ அல்லது சுற்றுலாவுக்கோ செல்லும் நேரத்தில், ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், உடைமைகள் தொலைந்துபோனால், பணம் பறிபோனால், கை அல்லது கால்களில் காயம் ஏற்பட்டால் மட்டுமே `டிராவல் இன்ஷூரன்ஸ்' பற்றி நினைவுக்கு வருகிறது.

ஆன்லைன் மூலமாகத் தனியார் பஸ் நிறுவனங்களில் டிக்கெட்டை புக் செய்யும்போது, `உங்கள் பேருந்து பயணத்தைப் பாதுகாக்க 15 ரூபாயில் டிராவல் இன்ஷுரன்ஸ் பாலிசி'யை எடுத்துக் கொள்ளலாமே என்ற வாசகம் இடம்பெறுவதைப் பார்த்திருப்பீர்கள். இந்த இன்ஷூரன்ஸ், பாதுகாப்பானது மட்டுமில்லை, மிகவும் பயனுள்ள ஒன்று. ஏனெனில், உதாரணத்துக்குச் சென்னையில் இருந்து சேலத்துக்கு தனியார் பேருந்தில் 500 ரூபாய்க்கு டிக்கெட் புக் செய்து செல்கிறீர்கள் என்றால் இதற்கு 15 ரூபாய் மட்டுமே இன்ஷூரன்ஸ். இது நாம் செலுத்தும் பஸ் டிக்கெட் தொகையில் வெறும் 3 சதவிகிதம் மட்டுமே. 

இந்த 15 ரூபாய் டிராவல் இன்ஷுரன்ஸ்-ல் காயமடைந்தவர்களுக்கு 1,00,000 ரூபாய்க்கான மருத்துவமனை செலவுகள், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால், தினசரி 500 ரூபாய் வீதம் அதிகபட்சம் 7 நாட்களுக்கு உதவித்தொகை, உடைமைகளை இழந்தால் 3,000 ரூபாய் கிடைக்கும். தனிப்பட்ட விபத்துக்கு 600,000 ரூபாய்.

பஸ் பயணம் ரத்து அல்லது இடையூறு என ஏதாவது  நேர்ந்தால் 1,500 ரூபாய் உள்பட பலதரப்பட்ட பிரச்னைகளுக்கும், பாலிசி எடுத்தவர்களுக்கு இன்ஷுரன்ஸ் க்ளெய்ம் வழங்கப்படுகிறது.

எப்படி க்ளெய்ம் செய்வது? 

பேருந்தில் பயணம் மேற்கொள்ளும்போது உடைமைகள் காணாமல் போனாலோ அல்லது கை, கால்களில் காயம் நேர்ந்தாலோ, உடனடியாக சம்பந்தப்பட்ட இன்ஷுரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். உடனே என்றால், விபத்து நிகழ்ந்த உடனே என்பது இல்லை. ஓரிரு நாள்களில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குத் தெரியப்படுத்துவது நல்லது. உதாரணத்துக்கு, நீங்கள் ரெட்பஸ் மூலம் ஆன்லைனில் பஸ் டிக்கெட் பதிவு செய்து பயணம் மேற்கொள்கிறீர்கள் என்றால், இதற்கு ஐசிஐசிஐ நிறுவனம் டிராவல் இன்ஷுரன்ஸ் பாலிசியை வழங்குகிறது. பஸ் பயணத்தின்போது ஏதாவது நேர்ந்தால், உடனே 1800 2666 அல்லது ihealthcare@icicilombard.com என்ற இமெயில் முகவரிக்குத் தெரியப்படுத்தலாம். இல்லையெனில், 

ICICI LOMBARD GENERAL INSURANCE COMPANY LIMITED 

ICICI Bank Tower, Plot No. 12, 

Financial District, Nanakram Guda, Gachibowli, 

Hyderabad, Andhra Pradesh, Pin Code-500032 

என்ற முகவரிக்கு மருத்துவமனை ரசீது, மருத்துவமனை செலவு உள்பட தேவையான மற்றும் சரியான ஆவணங்களைக் கடிதம் மூலமாக விண்ணப்பித்து இன்ஷுரன்ஸ் க்ளெய்ம் பெறலாம். இதுபோல் பஸ் பயணத்தின்போது எந்த நிறுவனம் இன்ஷூரன்ஸ் பாலிசி வழங்குகிறதோ, அந்த நிறுவனத்தின் போன் நம்பர், இமெயில் அல்லது முகவரிக்கு உடனே தெரியப்படுத்தி க்ளெய்ம் பெற்றுக் கொள்ளலாம். டிராவல் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை பெரும்பாலும், ஒரு வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை பாலிசி வழங்கப்படுகிறது. இந்த பாலிசிக் காலம் ஒரு வருடத்திற்கு மட்டுமே பொருந்தும்.

என்னென்ன மருத்துவமனைச் செலவுகள்! 

பேருந்து பயணத்தின்போது விபத்து நேர்ந்தால் பின்வரும் மருத்துவமனை செலவினங்களை இன்ஷூரன்ஸ் நிறுவனம், பாலிசிதாரருக்கு திருப்பிச் செலுத்தும். 

மருத்துவமனையில் தங்கும் செலவு 

நர்சிங் செலவு 

மருத்துவ பரிசோதனை செலவு 

மருத்துவர் கட்டணம் 

மருத்துவமனையால் வழங்கப்பட்ட மருந்தகங்களின் செலவு அல்லது மருத்துவமனையல்லாத பதிவு செய்யப்பட்ட மருந்தகத்திலிருந்து வாங்கப்பட்டதற்கான செலவு. 

பிசியோதெரபி செலவு போன்ற மருத்துவ செலவுகளுக்கு க்ளெய்ம் வழங்கப்படுகிறது. 

க்ளெய்ம் மறுத்தால்...? 

உங்களுடைய பஸ் பயணத்தின் போது ஏதாவது ஒன்று நேர்ந்து, ஒரு வேளை இன்ஷுரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு க்ளெய்ம் தர மறுத்தால், கீழ்க்கண்ட இன்ஷூரன்ஸ் குறைதீர்ப்பு மையத்தைத் தொடர்பு கொண்டு க்ளெய்ம் பெற்றிடுங்கள். 

Office of the Insurance Ombudsman, 

Fatima Akhtar Court, 

4th Floor, 453 (old 312), 

Anna Salai, Teynampet, 

CHENNAI – 600 018. 

Tel.:- 044-24333668 / 24335284 

Fax:- 044-24333664 

Email:- bimalokpal.chennai@gbic.co.in 

அரசுப் பேருந்துகளைவிட அதிகளவில் செலவு செய்து தனியார் பேருந்துகளில் பயணம் செய்கிறோம். பயணத்தின்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆகையால், இனி மேலாவது உங்களுடைய பஸ் பயணத்தின் போது டிராவல் இன்ஷூரன்ஸ்-ம் சேர்த்து எடுத்து, உங்களுடைய பயணத்தை பாதுகாத்துக் கொள்ளலாமே.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close