Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீர் விவகாரம் குறித்து சர்ச்சைக் கருத்து வெளியீடு! மன்னிப்புக் கோரியது காங்கிரஸ்

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட விழா மலரில் இருந்த இந்திய வரைபடத்தில் 'காஷ்மீர்' இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் 'மோடி அரசின் மூன்றாண்டு தோல்விகள்' என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ராஜ் பாபர் ஆகியோர் வெளியிட்டனர். இந்தப் புத்தகத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இந்தியா நல்லுறவை பேணத் தவறிவிட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை விளக்கும் பொருட்டு காஷ்மீரில் வரைபடம் அந்தப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருந்தது.

அந்த வரைபடத்தில் 'காஷ்மீர் இந்தியாவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் காங்கிரஸ் மன்னிப்பு கோர வேண்டும் என்று பா.ஜ.க கூறியது. இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரிய காங்கிரஸ் தலைவர் அஜய்மக்கான், 'இந்தச் சம்பவத்துக்கு காரணம் அச்சுப் பிழை. ஆனால் நாங்கள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டோம். இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என்று உறுதி கூறுகிறோம். இதேப் போன்ற தவறை பா.ஜ.கவும் செய்துள்ளது. 2014-ம் ஆண்டில் அவர்களுடைய இணையதளத்தில் இதேப்போன்று புகைப்படம் வெளியிடப்பட்டது. காங்கிரஸிற்கும், பா.ஜ.கவுக்கு உள்ள வித்தியாசம். நாங்கள் தவறுக்கு மன்னிப்பு கோரினோம். அவர்கள் மன்னிப்பு கோரவே இல்லை' என்றார். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close