Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கத்தாருடன் 4 நாடுகள் உறவு துண்டிப்பு! இந்தியா முக்கிய அறிவிப்பு

'கத்தார் நாட்டுடனான தொடர்பை அரேபிய நாடுகள் துண்டித்ததன்மூலம் இந்தியாவுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது' என மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

சுஷ்மா சுவராஜ்

கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு துணை போவதாகக் குற்றம்சாட்டி, சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து ஆகிய நாடுகள் தங்கள் உறவைத் துண்டித்தன. எவ்விதமான தூதரக உறவுகளும், வணிகம் மற்றும் போக்குவரத்து உறவுகளும் மேற்கொள்ளப்படமாட்டாது என வளைகுடா நாடுகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், 'கத்தார் நாட்டுடனான வளைகுடா நாடுகளின் பிளவு எவ்விதத்திலும் இந்தியாவைப் பாதிக்காது' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். மேலும், ‘கத்தார் உடனான உறவுநிலை என்பது வளைகுடா ஒத்துழைப்புக் குழுவின் உள்நாட்டுப் பிரச்னை. வளைகுடா நாடுகளின் இந்தப் பிளவு இந்தியாவைப் பாதிக்காது. இதுபோன்றதொரு சூழலில், இந்தியர் ஒருவருக்குக்கூட எவ்விதப் பிரச்னையும் ஏற்படக்கூடாதென இந்திய வெளியுறவுத்துறை முயன்றுவருகிறது’ என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close