Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீதிபதி கர்ணனுக்கு சிறைத் தண்டனையை உறுதிசெய்தது உச்சநீதிமன்றம்

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு வழங்கப்பட்ட ஆறு மாத சிறைத் தண்டனையை ரத்துசெய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 4-வது முறையாக ரத்துசெய்ய மறுத்த உச்சநீதிமன்றம், சிறைத் தண்டனையை உறுதிசெய்தது. 

 

சென்னை உயர்நீதிமன்றத்தில், எட்டு ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றியவர், சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, இவர் தடை உத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து, இவர் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன்கவுல் உள்பட பல நீதிபதிகள் ஊழல் செய்வதாக 2015-ஆம் ஆண்டு பிரதமருக்குக் கடிதம் எழுதினார் கர்ணன். இவரின் இந்தச் செயல்பாடு, நீதிமன்றத்தை அவமதிப்பதாக உச்சநீதிமன்றம் கருதியது.

எனவே, உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. அவரை நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குக் கர்ணன் முழுமையாக ஒத்துழைக்காத நிலையில், நீதிபதி கர்ணனின் மனநலம் குறித்து, கொல்கத்தா அரசு மருத்துவர்கள் பரிசோதனை நடத்த வேண்டும் என்று கடந்த வாரம் உத்தரவிட்டது. மனநலப் பரிசோதனைக்கு கர்ணன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனவே நீதிபதி கர்ணனுக்கு ஆறு மாத கால சிறைத் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி 4-வது முறையாக கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று  தள்ளுபடி செய்தனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close