Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'விவசாயிகளின் கடனைத் தள்ளுபடிசெய்தால் பொருளாதாரம் சீர்குலையும்' - ரிசர்வ் வங்கி ஆளுநர்

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறு ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.25 சதவிகிதமாகத் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Urjit Patel


இந்தக் கூட்டத்துக்குப் பின், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு முதலே பணவீக்கம் குறைந்து காணப்படுகிறது. ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு முன் இருந்தே பணவீக்கம் குறைந்து விட்டது. விவசாயிகளின் கடனைத் தள்ளுபடிசெய்தால், அது பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தி, பொருளாதாரத்தைச் சீர்குலைத்துவிடும். எனவே, இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கவனமாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.


பருவமழை பொய்த்து கடும் வறட்சி நிலவுவதால், வங்கிகளில் பெற்ற கடனைத் தள்ளுபடிசெய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநரின் இந்தக் கருத்து, விவசாயிகளைக் கோபப்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close