Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராகுல் காந்தியைக் கைதுசெய்தது ம.பி அரசு!

RahulGandhi

மத்தியப்பிரதேசத்தில், போராட்டத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை, நீமூச் என்ற இடத்தில் கைதுசெய்தனர். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 151-வது பிரிவின் கீழ் ராகுல் காந்தியைக் கைதுசெய்துள்ளது, ம.பி போலீஸ்.

மத்தியப்பிரதேசத்தில், கடந்த சில நாள்களாக விவசாயிகள், அவர்கள் விளைவிக்கும் பயிர்களுக்கு அதிக விலை கோரி போராட்டம் நடத்திவருகின்றனர். மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடிசெய்ததுபோல தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தொடர்ச்சியாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம்  நடத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம், மத்தியப்பிரதேசம் மண்டசவுர் பகுதியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு விவசாயிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க ராகுல் காந்தி சென்றபோது, நீமூச் என்ற இடத்தில் மத்தியப்பிரதேச காவல்துறை அவரைக் கைதுசெய்தது. வன்முறை நடந்த மந்த்சவுர் பகுதிக்கு செல்ல மக்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. தடையை மீறி ராகுல் காந்தி  மோட்டார் சைக்கிள் மூலம் சென்றதால் போலீசார் அவரை கைது செய்தனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close