Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கத் தடை! உச்சநீதிமன்றம் அதிரடி

ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 'அரசியல் சாசன அமர்வு, இதுகுறித்து முடிவு செய்யும் வரை தடை தொடரும்' என்று தெரிவித்துள்ளது.  

supreme court

 

வருமான வரி கணக்கு செலுத்துவதற்கு ஆதார் அவசியம் என மத்திய அரசு அறிவித்தது. வருமான வரி செலுத்துவோர், ஜூன் 30ஆம் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்செய்யப்பட்டது. இந்த வழக்கு, மே 4 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷண் அடங்கிய பெஞ்ச் வழக்கை விசாரித்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியிடப்படும் என்று அவர்கள் குறிப்பிட்டுருந்தனர். அதன்படி இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில், பான் கார்டுடன் ஆதாரை இணைக்க இடைக்காலத் தடை விதித்து, உச்சநீதிமன்றம் உத்தவு பிறப்பித்துள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close