Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”கொள்கை அரசு இல்லை...இது கொள்ளை அரசு!” - விவசாயிகள் பிரச்னை! பொங்கும் மக்கள்! - #VikatanSurveyResult

விவசாயிகள்

மத்தியப் பிரதேச விவசாயிகள், போராட்டம் நடத்தியதற்காக போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பயிர்களுக்கான விலை நிர்ணயம் கேட்டு நடந்த போராட்டம் இறுதியில், 8 விவசாயிகளின் உயிர்களைப் பறித்தது. ஆனால், விவசாயிகள் பிரச்னை என்பது இன்றையத் தேதியில், ஒரு பிரதேசத்துப் பிரச்னையாக மட்டும் இல்லாமல், தேசியப் பிரச்னையாகவே உருவெடுத்துள்ளது. முற்றிலும் இயற்கைத் தன்மை அழிந்து கார்ப்பரேட் ஆகிக் கொண்டிருப்பது ஒரு பக்கம்; விளைச்சல் இல்லாமல் கடன் சுமை அதிகரித்து வாழ்வின் போக்கு அறியாமல் விவசாயிகளின் திண்டாட்டம் ஒருபக்கம். பிரச்னை யார் பக்கம்? இதற்குத் தீர்வு என்னவென்று மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. 

2017 ஆம் வருடத் தொடக்கத்திலிருந்து விவசாயத்துக்காக நாடெங்கும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்தபடி இருக்கின்றன. தங்களது பிரச்னைகளுக்காக விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருவது சரியே என்று பெரும்பாலான மக்கள் கருத்து கூறியுள்ளனர். 

விவசாயிகள் 

 

விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை நேரடியாக தொடர்புடைய துறைக்கும் அதன் அதிகாரிகளிடத்திலும் எடுத்துச் செல்லத் தவறுகிறார்களா என்று கேட்கப்பட்டது. 'முறையாக எடுத்துச் சென்றும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில்தான், விவசாயிகள் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர்' என்று பதில் அளித்துள்ளார்கள் மக்கள். 

விவசாயிகள்

 

ராக்கெட் விடுவதில் விடாமுயற்சியாக சாதனை படைத்துள்ள அரசு, விவசாயிகளின் கடன் தீர்ப்பு கோரிக்கையில், முரண்பட்டு இருப்பதாகவே அதிக எண்ணிக்கையிலான மக்கள் கருத்து கூறியிருக்கிறார்கள்.

விவசாயிகள்

 

உணவு அளிக்கும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது ஒருபக்கம் அதிர்ச்சியின் உச்சம் என்றாலும் அதற்கான காரணம் வறட்சியும் கடன்சுமையும் என்பது பெரும்பாலான மக்களின் கருத்தாக இருக்கிறது.

விவசாயிகள்

அதே சமயம் பிரச்னை அரசிடமா? விவசாயிகளிடமா? என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ள பலர், 'சந்தேகமே இல்லாமல், பிரச்னை அரசிடம்தான்' என்று உறுதிபடக் கூறியிருக்கிறார்கள்.'விவசாயிகள் சேற்றில் கைவைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். வயிற்றுப் பசிக்கு உணவு இருந்தால் மட்டுமே நாட்டின் வளர்ச்சிகூடும்'.


'கொள்கை அரசு இல்லை இது; கொள்ளை அரசு!'. 

'தீர்வு, அரசு கையில் மட்டுமே உள்ளது. விவசாயிகளை மையமாக வைத்து நடத்தும் அரசியலைத் தடுக்க வேண்டும். இச்சூழலில் மீண்டும் பசுமைப்புரட்சியை நாம் கையில் எடுக்கவேண்டும்'.

'தண்ணீர் சேமிப்பு, நீர் மேலாண்மை ஆகியவற்றுக்கு அரசு உதவி செய்யவேண்டும். சந்தைப்படுத்துதல் மற்றும் விலை நிர்ணயம் ஆகியவற்றில், இடைத் தரகர்கள் தொல்லையின்றி வெளிப்படைத் தன்மை இருக்க வழி செய்யவேண்டும். இயற்கை விவசாயத்தின் உயரிய தொழில்நுட்பம் அனைவரையும் சென்றடைய வேண்டும். வங்கிக் கடன், மானியம் ஆகியவை எளிய வழியில், கிடைக்க வழிசெய்யவேண்டும். நீர் மேலாண்மை பற்றி அரசு முதலில் தன்னிறைவு அடையவேண்டும்' போன்ற கருத்துகள் பதிவாகியுள்ளன.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close