Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விவசாயிகள் கிளர்ச்சி : மத்தியப் பிரதேச முதல்வரின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று தொடக்கம்...!

விவசாயப் பொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம், கடன் தள்ளுபடி உள்ளிட்டக் கோரிக்கைளை வலியுறுத்திக் கடந்த 2 ஆம் தேதி முதல் மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, கடந்த 6 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள மான்ட்சர் மாவட்டத்தில், விவசாயிகள் பேரணி சென்றனர்.


அப்போது, ஆளும் பி.ஜே.பி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு, பேரணியாக வந்த விவசாயிகளைப் போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். போலீஸாரின் தடுப்பை மீறிச் சென்றவர்களைக் காட்டுமிராண்டித்தனமாகச் சுட்டு வீழ்த்தியுள்ளனர். தற்போதுவரை இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


இதையடுத்து, அங்கு விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. நேற்று தலைநகர் போபால் வரை போராட்டம் வெடித்தது. இதனால், தடியடி நடத்தியும், கைது செய்தும் போராட்க்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தது காவல்துறை. இந்நிலையில், அங்கு அமைதி நிலவவும், விவசாயிகள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் வலியுறுத்தி, இன்று முதல் (சனிக்கிழமை) காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சுங் சௌஹான் தெரிவித்துள்ளார்.


இதனால், இன்று விவசாயிகள் அரசு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close