Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'காஷ்மீர் விவகாரத்துக்கு நிரந்தர முடிவு எட்டப்படும்!' - ராஜ்நாத் சிங் நம்பிக்கை

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வெகு நாள்களாக அமைதியற்ற நிலை நிலவி வருகிறது. இந்த நிலைமைக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத் சிங்

அவர் இது குறித்து பேசுகையில், 'மத்திய அரசு காஷ்மீர் விவகாரத்துக்கு விரைவில் நிரந்தர முடிவு எடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். பாகிஸ்தான்தான் காஷ்மீரில் ஸ்திரமற்றத் தன்மைக்குக் காரணம். பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்கு நுழைந்து ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஆனால், ராணுவத்தினர் அதற்கு தொடர்ச்சியாக தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். 

வடகிழக்கில் அவ்வப்போது எழும் கிளர்ச்சி மற்றும் மாவோயிஸ்ட்களின் தாக்கம் குறித்து பேசிய சிங், 'மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து வடகிழக்கில் ஏற்படும் கிளர்ச்சி மற்றும் மத்திய இந்தியாவில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் குறைந்துள்ளன. மோடியின் தலைமையில் மிகவும் வலிமையான அரசு மத்தியில் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இந்திய ஒரு சக்தி வாய்ந்த நாடாக உருவெடுத்து வருகிறது.' என்று நம்பிக்கை ததும்ப பேசியுள்ளார்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close