Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராமசந்திர குஹா விலகலைத் தொடர்ந்து பிசிசிஐ-க்கு டிராவிட் முக்கிய கடிதம்!

வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட நான்கு நிர்வாகிகளை உச்சநீதிமன்றம், பிசிசிஐ நிர்வாக கமிட்டியில் (Committee of Administrators) நியமனம் செய்தது. சில நாள்களுக்கு முன்னர் குஹா, தனிப்பட்ட காரணங்களுக்காகவும் பிசிசிஐ சில விஷயங்களில் முரணாக செயல்படுவதாகக் கூறியும், கமிட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, ராகுல் டிராவிட் 'என்ன முரண் இருக்கிறது?' என்று நிர்வாக கமிட்டியிடம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், இந்திய கிரிக்கெட்டின் ஜூனியர் அணிகள் சிலவற்றுக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணி பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார். ஐபிஎல், ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நடைபெறுவதால், டிராவிட்டின் ஜூனியர் அணி பயிர்சியாளர் பணி  பாதிக்கப்படுவதுதான் குஹாவின் குற்றச்சாட்டு என்று தகவல் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான் டிராவிட், நிர்வாக கமிட்டியிடம் இது குறித்து பதில் கேட்டு கடிதம் எழுப்பியுள்ளார். இந்த விஷயம் குறித்து டிராவிட், 'பிசிசிஐ-க்கு நிர்வாக கமிட்டிக்கும் என் நிலை குறித்தும் என் ஒப்பந்தம் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன். பிசிசிஐ-ன் விதிமுறைகளின்படி பார்த்தால் நான் எந்த விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை. என் ஒப்பந்தம் இருக்கும்போதே நடுவில் எதாவது மாற்றம் கொண்டு வரப்பட்டிருந்தால், நான் தவறிழைத்திருப்பதாக குற்றம் சாட்டுவது சரியல்ல. 

நான் மட்டுமல்ல. என்னைப் போன்று பலர் இந்த நிலைமையில் இருக்கின்றனர். அதனால்தான் இந்த விஷயம் குறித்து தெளிவான புரிதல் வேண்டும் என்கிறேன். இந்த விஷயம் எங்களிடம் தனிப்பட்ட முறையில் அணுகப்படாமல், பொதுத் தளத்தில் அணுகப்பட்ட விதம் சற்று ஏமாற்றம் அளிக்கிறது' என்று மன வேதனையை கொட்டித் தீர்த்துள்ளார்.  
 

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close