Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடியின் மூன்றாண்டுகள் ’சாதனைகள்’ குறித்து உங்களுக்கான சில கேள்விகள்..!

பிரதமர் மோடியின் மூன்றாண்டு கால ஆட்சி குறித்து ஒரு விநாடி-வினா போட்டியை நடத்த பாஜக அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. மூன்றாண்டு ஆட்சி நிறைவு கொண்டாட்டத்தை இவ்வாறு வித்தியாசமாகக் கொண்டாட முடிவெடுத்துள்ளதாம் பி.ஜே.பி.

மோடி ஆட்சி

’மோடி ஃபெஸ்ட்’ என்றழைக்கப்படும் மோடி திருவிழா வருகிற ஜூன் 15-ம் தேதி வரை கொண்டாடப்படும் என பாஜக அறிவித்துள்ளது. மத்தியில் பாஜக தலைமையிலான அரசு அமைந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்தையொட்டி பாஜக பல கொண்டாட்டங்களை நிகழ்த்தி வருகிறது. இந்த வரிசையில் புதிதாக மாணவர்களுக்கான ’மோடி விழா’ நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மோடி அரசாங்கம், மோடியின் திட்டங்கள் எனப் ’பொது அறிவை’ வளர்த்துக்கொள்ளும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு விநாடி-வினா போட்டி நடத்தப்படவுள்ளதாம். இதில் மோடியின் சிறப்பு வாய்ந்த திட்டங்களான ‘சுவச் பாரத்’ என்ற தூய்மை இந்தியா திட்டத்திலிருந்து பணமதிப்பு நீக்க நடவடிக்கை வரை, ’மான் கீ பாத்’ முதல் ’மோடி ஃபெஸ்ட்’ வரை அத்தனை நல் வளர்சித் திட்டங்கள் குறித்தும் இந்த விநாடி-வினா போட்டியில் கேள்விகள் கேட்கப்படும் என ’க்ளூ’வும் கொடுத்துள்ளனர். 

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி அறிவித்துள்ளார். ‘நாட் ஒன்லி க்விஸ் ப்ரோக்ராம்ஸ் மக்காஸ்...’ இன்னும் இது போல் கைவசம் பல ஐடியாக்களை வைத்துக்கொண்டு தயாராக இருக்கிறார்களாம் பா.ஜ.கவினர்..!

 

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close