Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’கோலியை முதன்முதலில் பார்த்தபோது...’ மனம் திறந்தார் சேவாக்!

இந்திய கிரிக்கெட் அணியில் வெவ்வேறு காலகட்டங்களில் சிறந்து விளங்கிய வீரர்கள் என்றாலும், இந்திய அணிக்காக சில போட்டிகளில் ஒன்றாக விளையாடியவர்கள் சேவாக்- கோலி. சிறு வயது விராட் கோலி குறித்த நினைவலைகளை சமீபத்தில் பகிர்ந்துள்ளார் சேவாக்.

சேவாக்- கோலி

இந்திய கிரிக்கெட்டின் அடையாளங்களுள் ஒருவர் சேவாக். சுமார் 13 ஆண்டுகாலம் இந்தியர்களின் மனம் கவர்ந்த கிரிக்கெட் விளையாட்டை நேசித்து விளையாடியவர். இந்திய அணிக்காக 23 டெஸ்ட் சதங்களும் 15 ஒருநாள் சதங்களும் அடித்தவர். தனது பார்மின் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, எந்த பந்துவீச்சாளர்கள் எப்படி பந்துவீசினாலும் சொல்லி வைத்து அடிக்கும் கில்லி. அப்படிப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரர், பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம்பெற்றிருந்த இளம் வீரர் விராட் கோலி குறித்து தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

சேவாக் கூறுகையில், ‘விராட் கோலி முதன்முதலாக 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த போது நான் சந்தித்திருக்கிறேன். சீனியர்களான எங்கள் முன் பணிவாக இருந்தாலும், சரியான சேட்டைக்காரர் கோலி. கிரிக்கெட்டுக்காக எவ்வளவு உழைப்பையும் வழங்குவார். அவரது இளம் வயது பயிற்சியாளர் அஜித் சவுத்ரி எனது நண்பராவர். அவர்தான் கோலியை அறிமுகம் செய்து வைத்தவர்’ எனத் தெரிவித்தார்.

ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சேவாக்- கோலி இருவரும் வெவ்வேறு எல்லைகளில் உள்ளவர்கள். ஆக்ரோஷத்தின் ஊற்று கோலி என்றால் அதற்கு நேர் எதிரானவர் சேவாக். ஒன்றாக சில போட்டிகளிலேயே விளையாடி இருந்தாலும், நல்ல நட்புறவு பாராட்டும் சிறந்த வீரர்கள்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close