Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட பெண் காவலர்!

சக காவல்துறை ஊழியரால் தொந்தரவு அளிக்கப்பட்டதால், காவல் நிலையத்திலேயே பெண் காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தூக்கு

பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களால் பெண்கள் பல்வேறு ரீதியிலான தொல்லைகளை அனுபவித்து வருவது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. சிறிய நிறுவனங்கள் தொடங்கி, அரசு துறை வரையிலும் இது நடக்கிறது. குறிப்பாக காவல்துறையிலும், ஆண் காவலர்களால் பெண்கள் தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளாகிவருகின்றனர். பலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர்.

இதனிடையே பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், காவல் நிலையத்திலேயே பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமன்பிரீத் கவூர் என்பவர் நிதான் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இவரை நிர்பய் சிங் என்ற காவல்துறை அதிகாரி தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அமன்பிரீத் கவூர், தனது காவல் நிலையத்திலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து நிர்பய் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமன்பிரீத் கவூரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டுள்ளது. 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close