Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி இல்லை' - மத்திய அமைச்சர் விஜய் கோயல் ஆவேசம்..!

 

''எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடும்வரை, அந்நாட்டுடன் கிரிக்கெட் தொடர் நடத்தப்போவதில்லை'' என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார். 

 

 

சீனாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல், 'எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. பாகிஸ்தான் அதனுடைய எல்லையை தாண்டிவிட்டது. எல்லையைத் தாண்டும்போது அதற்கான  பதிலடி கொடுக்கவேண்டியது அவசியம். பாகிஸ்தான் நாட்டுடன், நாம் கிரிக்கெட் போட்டி நடத்தாமல் இருப்பதே, அவர்களுக்கு நாம் கொடுக்கும் பதிலடி; 

எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கும் வரை, நாம் அந்நாட்டுடன் கிரிக்கெட் போட்டிகளை நடத்தப்போவதில்லை. பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு பொருளுதவி செய்கிறது' என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார். 2012-2013-ம் ஆண்டுக்குப் பிறகு, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் இங்கு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close