Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'காந்தி ஒரு வியாபாரி...' அமித் ஷா சர்ச்சைக் கருத்து!

 

2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிஜேபி தேசியத் தலைவர் அமித் ஷா, மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

 

Amit Shah


இது குறித்து கடந்த சில நாள்களுக்கு முன் அமித் ஷா கூறியதாவது, "காங்கிரஸ் கட்சி, எந்த ஒரு கொள்கை மற்றும் சித்தாந்தத்தின் அடிப்படையிலும் உருவாக்கப்படவில்லை. அது சுதந்தரப் போராட்டத்துக்காக உருவாக்கப்பட்டது. காந்தி ஒரு வணிக குடும்பத்தில் பிறந்தவர். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை, சரியாக கணிக்கக்கூடியவர் காந்தி. அவர் ஒரு புத்திசாலி வணிகர்.


அதனால்தான் சுதந்திரத்திற்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியை அவர் கலைக்கச் சொன்னார். ஆனால், அது நடக்கவில்லை. இந்நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களே, அந்தக் கட்சியை அழித்து வருகின்றனர்" என்று கூறியுள்ளார்.


அமித் ஷாவின் இந்தக் கருத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, இந்தக் கருத்துக்கு அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close