Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உண்ணாவிரதத்தை முடித்து கொண்ட மத்திய பிரதேச முதல்வர்!

மத்தியப் பிரதேசத்தில் அமைதி திரும்ப வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.


சிவராஜ் சிங் சௌஹான்

மத்தியப் பிரதேசம் மாண்ட்சாரில் விவசாயப் பொருள்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்யக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 விவசாயிகள் பலியாகினர். இந்தச் சம்பவத்துக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபால், இந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்தது.இதனிடையே மத்தியப் பிரதேசத்தில் அமைதி நிலை திரும்பவேண்டும் எனவும், விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தி, அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் காலவரையற்ற உண்ணவிரதத்தை அறிவித்தார்.

இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இளநீர் குடித்து அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டுள்ளார். விவசாயிகள் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close