Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதலமைச்சரின் வாகனத்தை மறித்தவர்களுக்கு ஜாமீன் மறுப்பு!

உத்தரப் பிரதேச முதல்வர் யோபி ஆதித்யநாத்தின் வாகனம் முன்பு கறுப்புக்கொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

யோகி

உத்தரப் பிரதேசத்தில் பெரும்பாண்மை பலத்துடன் வென்ற பா.ஜ.க, யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி அமைத்தது. இதையடுத்து உத்தரப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. இறைச்சிக் கூடங்களுக்குத் தடை, ஆண்டி ரோமியோ படை என ஆதித்யநாத் அரசின் அறிவிப்புகள் மக்களை அதிருப்தி அடையச் செய்து வருகின்றன..

இதனிடையே கடந்த புதனன்று முதலமைச்சரின் காரை வழிமறித்து, லக்னோ பல்கலைக்கழக மாணவர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 11 மாணவர்களுக்கும் நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களை கல்லூரியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 2 பெண்களும் அடங்குவர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close