Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடியும் இவரும் ஒன்றுதான்! சாடும் காங்கிரஸ் தலைவர்

கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயல்பாடும் மோடியின் செயல்பாடும் ஒன்றுபோல் உள்ளது. இருவரும் ஒரே படகில் பயணம் செய்கிறார்கள் என்று கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம்சாட்டியுள்ளார்.

நாகர்கோவிலுக்கு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா தற்போது  15 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. நாட்டின் ஒருமைப்பாட்டை தகர்க்கும் வகையிலும், மத நல்லிணக்கத்தை தகர்க்கும் வகையிலும், மதவாதத்தை பயன்படுத்தி மக்களை பிரித்தாளும் செயலிலும், ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையிலும் பி.ஜே.பி. அரசின் செயல்பாடு இருக்கிறது. காஷ்மீர் பிரச்னையை கையாள்வதில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது.

ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த அரசு ஏன் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யவில்லை. பிரதமர் மோடி உலகம் சுற்றும் வாலிபராக உள்ளார். 2019-ஆம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதிலும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி பி.ஜே.பி மற்றும்  ஆர்.எஸ்.எஸ்-க்கு  எதிராக  தேர்தலை சந்திக்க இருக்கிறது.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயல்பாடும் மோடியின் செயல்பாடும் ஒன்றுபோல் உள்ளது. இருவரும் ஒரே படகில் பயணம் செய்கிறார்கள். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை மக்கள் எதிர்க்கிறார்கள். அத்தியாவசிய விலைவாசி எல்லாம் உயர்ந்துள்ளது. தமிழக அரசு மீது மத்திய அரசு அதிகாரம் செலுத்த முயற்சிக்கிறது. பி.ஜே.பி. அரசில் சிறிய அளவில்கூட ஊழல் இல்லை. அனைத்துமே பெரிய அளவில் நடக்கிற ஊழல் தான் என அவர் தெரிவித்தார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close