Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்கா வருகை தர நரேந்திர மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு!

அமெரிக்காவுக்கு வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து வருகிற 26 ஆம் தேதி மோடி அமெரிக்கா செல்ல இருக்கிறார். இந்தச் சந்திப்பில் இரு நாட்டுடனான உறவு மற்றும் பிற விஷயங்கள் குறித்து இருவரும் கலந்து பேச இருக்கிறார்கள். இதனை வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. 

பெரும்பாலும் அனைத்து நாட்டு தலைவர்களுடனும் பிரதமர் மோடி  நட்பு பாராட்டி வருகிறார். ஆனால் ட்ரம்ப் அதிபராகப் பதவி ஏற்று ஐந்து மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போதுதான் பிரதமர் மோடி அவரைச் சந்திக்க செல்கிறார். இதற்கு முன் கடந்த ஆண்டு அதிபராக பராக் ஒபாமா இருந்தபோது பிரதமர் மோடி, அமெரிக்கா சென்று வந்தார். 

அமெரிக்கா இந்தியா இடையிலான உறவை இந்தச் சந்திப்பு மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹெச் 1பி விசா விவகாரம் உள்ளிட்ட அமெரிக்காவுடன் தொடர்புடைய பிரச்னைகள் இந்தச் சந்திப்பில் பேசப்படலாம் என்று கூறப்படுகிறது. இருவரிடையிலான முக்கியப் பேச்சுவார்த்தைகள் வருகிற 26 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

ஐ.டி துறை நிறுவனங்களில் வேலை இழப்பு பிரச்னை அதிகரித்து வரும் நிலையில், விசா விவகாரம் மற்றும் அமெரிக்காவில் இந்தியர்களின் பணி போன்ற விஷயங்கள் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டு சுமூகமான முடிவுகள் எடுக்கப்பட்டால், பிரதமரின் இந்தப் பயணத்துக்கு அர்த்தம் இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close