Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாட்டிறைச்சித் தடைக்கு எதிராக மேகாலயா சட்டமன்றத்தில் தீர்மானம்!

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதைத் தடை செய்து சட்டத் திருத்தம் கொண்டு வந்ததற்கு எதிராக மேகாலயா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு அந்த மாநிலத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதில் பா.ஜ.க.வின் தோழமைக் கட்சிகளின் ஒன்றான தேசிய மக்கள் கட்சி (National People Party) உள்பட அனைத்துக் கட்சிகளும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும்போது மேகாலயா சட்டமன்றத்தில், 'இந்திய அரசியல் சட்ட சாசனம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிராக இந்த சட்டம் இருக்கிறது.' என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்திய காங்கிரஸ் தலைமையிலான அரசு, 'தற்போது மாட்டிறைச்சித் தொடர்பாக இயற்றப்பட்டு இருக்கும் சட்டத் திருத்தம் அதிக விளைவுகளை உண்டாக்கக் கூடியது. மேகாலயாவில் இருக்கும் விவசாயிகள் வயதாகும் மாட்டை விற்றுத்தான் அவர்களின் வாழ்வாதாரத்தை தக்கவைத்துக் கொள்வார்கள். ஆனால், புதிய சட்டம் மூலம் இது தடைபடுகிறது.' என்றுள்ளது. இந்த புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதில் இருந்து மேகலாயாவில் இருக்கும் பா.ஜ.கவின் பல முக்கிய பிரமுகர்கள், எதிர்ப்பு தெரிவித்து கட்சியிலிருந்து விலகியுள்ளனர். அடுத்த ஆண்டு மேகாலயாவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், மேகாலயாவில் நடந்து வரும் சம்பவங்கள் பா.ஜ.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close