Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் மல்லையா வழக்கில் இன்று லண்டனில் விசாரணை..!

கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான விஜய் மல்லையா மீதான வழக்கில் மல்லையாவை இந்தியா அழைத்து வருவது தொடர்பான மனு இன்று லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

விஜய் மல்லையா

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்று, திருப்பிச் செலுத்தாத மல்லையா, இங்கிலாந்தில் அடைக்கலம் புகுந்தார். வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையாவைக் கைதுசெய்து அழைத்துவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இந்திய அரசு. 

இந்தியாவுக்கு மல்லையாவை அழைத்து வந்து விசாரிப்பது தொடர்பான மனு இன்று லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கும் மல்லையாவை இன்று இந்தியாவுக்கு அழைத்துச்செல்ல நீதிமன்றம் உத்தரவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், பல்வேறு நிபந்தனைகளுடன் மல்லையா இந்தியா அழைத்து வரப்பட்டு கடன் ஏய்ப்பு வழக்கில் தண்டிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close