Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விவசாயக்கடன் தள்ளுபடி: மாநில அரசுகளை கைகாட்டியது மத்திய அரசு!

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதால் ஏற்படும் சுமையை மாநில அரசுகளே ஏற்றுக்கொள்ள வேண்டுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.

விவசாயக் கடன்

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநில விவசாயிகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பருவமழை இன்றி நாடு முழுவதும் வறட்சி நிலவுவதால், விளைபொருள்களுக்கு சரியான, நியாயமான விலை கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்நிலை மாற வேண்டுமென்றும், விவசாய தற்கொலைகள் இல்லாத நாடாக உருவாக்க வேண்டுமென்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். சமீபத்தில் சென்னையிலும் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர் விவசாயிகள். பலன் ஏதும் இல்லாமல் விவசாயிகள் தவித்து வருவதாகவே விவசாய சங்கங்கள் மத்திய, மாநில அரசுகளிடம் முறையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயக் கடன் தள்ளுபடி கோரி மத்தியப்பிரதேச மாநில விவசாயிகள் ஈடுபட்ட போராட்டம் வன்முறையாக வெடித்து சில விவசாயிகள் தங்கள் உயிரையும் இழக்க நேர்ந்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் போராட்டம் வெடிக்குமென மத்தியப் பிரதேச விவசாயிகள் அறிவித்தனர். இதனிடையே, மகாராஷ்டிர  அரசு நேற்று முன்தினம் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இதேபோல் மகாராஷ்டிர மாநிலத்துக்கு முன்னரே முதல் ஆளாக விவசாயக் கடன்களை உத்தரப்பிரதேச அரசு தள்ளுபடி செய்து அறிவித்தது.

இவ்வாறு பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதற்கான காரணம் குறித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அருண் ஜெட்லி, ‘விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதால் ஏற்படும் சுமையை அந்தந்த மாநில அரசுகளே ஏற்றுக்கொள்ள வேண்டும். மத்திய அரசு அதில் தலையிடாது. இதுவரை கடன் தள்ளுபடி அறிவித்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எந்தவொரு நிதி உதவியும் செய்யவில்லை’ எனக் கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close