Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

' டீசலுக்குப் பணம் கொடு... இல்லனா சடலத்தை சைக்கிள்ல கொண்டு போ''!- உ.பி.யில் நடந்த அவலம்

ம்புலன்சுக்கு டீசல் போட பணம் கொடுக்காததால், சிறுமி ஒருவரின் சடலத்தை சைக்கிளில் கொண்டு சென்ற அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

கௌசாம்பி மாவட்டம் மாலக் சத்தி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த்குமார் என்பவரின் மகள் பூனம், உடல் நலக்குறைவு காரணமாகக் கடந்த சனிக்கிழமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். உறவினர் ஒருவரிடம் பணம் வாங்குவதற்காக ஆனந்த்குமார் அலகாபாத் செல்ல வேண்டியிருந்தது. சிறுமியின் தாய்மாமா பிரிஜ் மோகன் என்பவரிடம் மகளைப் பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு, ஆனந்த்குமார் அலகாபாத் சென்றிருக்கிறார்.  

இதனிடையே, சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி நேற்று இறந்து போனார். சிறுமியின் சடலத்தைச் சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல, ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தருமாறு மருத்துவர்களிடத்தில் மோகன் கேட்டுள்ளார். 'டீசலுக்குப் பணம் கொடுத்தால் மட்டுமே ஆம்புலன்ஸ் அனுப்ப முடியும் ' என மருத்துவர்கள் கூறி விட்டனர். மோகனிடமோ பணம் இல்லை. 

தொடர்ந்து, மருமகள் பூனத்தின் உடலைத் தோளில் சுமந்தவாரே 10 கிலோ மீட்டர் தொலைவுள்ள சொந்தக் கிராமத்துக்கு மோகன் சைக்கிளில் சென்றுள்ளார். சிறுமியின் சடலத்தை மோகன் சைக்கிளில் கொண்டு செல்வது போன்ற புகைப்படம் இன்று பத்திரிகைகளில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கௌசாம்பி மாவட்ட ஆட்சியர், மணீஷ்குமார் வெர்மா, பணியிலிருந்த மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். 


 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close