Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மருத்துவமனையில் குழந்தையின் விரல்களைக் கடித்துக் குதறிய எலிகள்!

ராஜஸ்தான் மருத்துவமனையில், பிறந்து  நான்கே நாள் ஆன குழந்தையின் விரல்களை, எலிகள் கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை

ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது எம்.ஜி. மருத்துவமனை. தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் இந்த மாவட்டம் இருக்கிறது. அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த மருத்துவமனையில், நான்கு தினங்களுக்கு முன் பிரியங்கா என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நேற்று, மருத்துவமனையிலிருந்த பிரியங்காவினுடைய குழந்தையின் விரல்களை எலிகள் கடித்துக் குதறியுள்ளன. அங்கு சரியான மின் விளக்கு வசதிகள் இல்லாததால், எலிகள் கடிப்பது யாருக்கும் தெரியவில்லை. வெளிச்சம் வந்த பிறகுதான், குழந்தையின் விரல்களில் ரத்தம் வடிவதைப் பார்த்துள்ளனர். இதையடுத்து, குழந்தையின் குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்தின்மீது புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து, குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close