Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இத்தாலி செல்கிறார் ராகுல் காந்தி!

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இத்தாலி செல்கிறார்.

Rahul Gandhi

கருணாநிதி வைர விழா, மத்தியப்பிரதேசத்தில் கைது என்று பரபர அரசியலில் ஈடுபட்டுவருகிறார், ராகுல் காந்தி. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராகத் தற்போதே வலம் வந்துகொண்டிருக்கிறார். குறிப்பாக, விரைவில் அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவியேற்க உள்ளார். இதற்கான முடிவு, காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் கடந்த வாரம் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தனது பாட்டி மற்றும் உறவினர்களைப் பார்ப்பதற்காக, ராகுல் காந்தி இத்தாலி செல்ல உள்ளார். அங்கு, அவர்களுடன் சில நாள்கள் செலவிட இருப்பதாக, ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், ஜூலை 12 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன் சற்று ஓய்வு எடுப்பதற்காக அவர் இத்தாலி செல்ல இருப்பதாக, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close