Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய ரிசர்வ் படையினர்மீது தாக்குதல்... 3 பேர் கவலைக்கிடம்!

காஷ்மீரில், மத்திய ரிசர்வ் படையினர்மீது நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 9 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதில், 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கஷ்மீர்

காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள்மீதும்  ராணுவத்தினர்மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருகிறது. கடந்த ஆண்டு ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வாணி கொல்லப்பட்டது முதலே, அங்கு பதற்றமான சூழல் நிலவிவருகிறது. மேலும், பாதுகாப்புப் படையினருக்கு எதிராக கல்வீச்சு சம்பவங்களும் அதிகரித்துவருகின்றன. 

இதனிடையே, இன்று மாலை மத்திய ரிசர்வ் படையினர் (CRPF) மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. புல்வாமா மாவட்டம்  ட்ரால் என்ற பகுதியில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் படையினர் முகாம்மீது மர்ம நபர்களால் கையெறி குண்டுகள் வீசப்பட்டன. அதில், 9 வீரர்கள் காயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில், 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close