Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முன் ஜாமீன் மனு தள்ளுபடி... கைதாகிறாரா டி.எச்.குமாரசாமி?

இரும்புத் தாது சுரங்க ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டி.எச்.குமாரசாமியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குமாரசாமி

கடந்த 2006-2007 வரையில் கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் டி.எச்.குமாரசாமி. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனான இவர்,  மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவராக உள்ளார். இவரது ஆட்சிக் காலத்தில், இரும்புத் தாது சுரங்கம் அமைப்பது தொடர்பாக முறைகேடு நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் லோக் ஆயுக்தா போலீஸாரிடம் ஆஜராகாமல் விலக்குக் கோரி வந்தார் குமாரசாமி.

இதனிடையே, இன்று பெங்களூரு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குமாரசாமி தரப்பில் ஆஜரான அவரது வக்கீல், முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், குமாரசாமிக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டனர். இதனால் குமாரசாமி கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close