Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் தாக்குதல்!

காஷ்மீரில், ஆறு வெவ்வேறு இடங்களில் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலால், கிட்டத்தட்ட 13 பாதுகாப்புப் படையினர் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல் வந்துள்ளது. காயம் அடைந்த வீரர்கள், உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றனர். 24 மணி நேர இடைவெளியில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில்... ஐந்து தெற்கு காஷ்மீரிலும் ஒரு தாக்குதல் வடக்கு காஷ்மீரிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாம். அல்-உமர் முஜாஹிதீன் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புகள்தான் இந்தத் தாக்குதல்களுக்குக் காரணம் என்று காஷ்மீரிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில், தீவிரவாதிகள் க்ரெனேட் ரக குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இந்தத் தொடர் தாக்குதல் சம்பவங்களை அடுத்து, காஷ்மீரில் உள்ள பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close