Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பட்டமளிப்பு விழாவில் கறுப்பு கவுனுக்கு தடா - கான்பூர் ஐஐடி அதிரடி!

ஐஐடி

கல்லூரிகளில் பட்டம் பெறும்போது கறுப்பு கவுன் அணிவதை மாற்ற, கான்பூர் ஐஐடி முடிவு செய்துள்ளது. பிரிட்டிஷாரால் அறிமுகப்படுத்தப்பட்ட கறுப்பு கவுன் முறைக்குப் பதிலாக, நம்முடைய பாரம்பர்ய உடைகளையே அணிய வேண்டும் என்றும் அதிரடியாகக் கூறியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில், பாஜக அமோக வெற்றி பெற்றது. யோகி ஆதித்யநாத் முதல்வரானார். அவர் முதல்வரானது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தவண்ணம் இருக்கிறார். அவை, வரவேற்பையும் எதிர்ப்பையும் பெற்று வருகின்றன.

இந்த நிலையில், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டமளிப்பு விழாக்களில் பயன்பாட்டில் இருந்துவரும் கறுப்பு கவுனை மாற்ற, கான்பூர் ஐஐடி முடிவுசெய்துள்ளது. கறுப்பு கவுனுக்கு மாற்றாக, நம்முடைய பாரம்பர்ய உடைகளான பைஜாமா, குர்தா மற்றும் சுடிதார் போன்றவற்றையே அணியலாம் என்று கூறியுள்ளது. இதன் பட்டமளிப்பு விழா, வரும் 15, 16 தேதிகளில் நடக்க இருக்கிறது. இந்த விழாவில், டாடா சன்ஸ் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள தமிழர் சந்திரசேகரன் கலந்துகொள்கிறார். 

பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய கறுப்பு கவுனுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாரம்பர்ய உடைகளை ஊக்குவிக்கும் வண்ணம் ஐஐடி கான்பூர் நிர்வாகம் எடுத்துள்ள இந்த முடிவுக்கு, பாராட்டுகள் குவிந்துவருகின்றன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close