Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டார்ஜிலிங்கில் தொடரும் போராட்டம்... சுற்றுலாப் பயணிகள் அவதி

டார்ஜிலிங்கில், தனி மாநிலம் கேட்டு கூர்க்கா இன மக்கள் போராடிவருவதால், சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

டார்ஜிலிங்

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில், கூர்க்கா இன மக்கள் அதிகளவில் வசித்துவருகின்றனர். கடந்த சில நாள்களாகவே, கூர்க்கா இன மக்கள் தனி மாநில உரிமை கேட்டுப் போராடிவருகின்றனர். கடந்த 8 ஆம் தேதி, கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், காவல்துறை வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து, ராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

இதனிடையே, டார்ஜிலிங்கில் நடக்கும் கலவரங்களால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.மேலும், போராட்டத்தின் காரணமாக பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இதனால், இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் டார்ஜிலிங் பரபரப்பின்றி காணப்படுகிறது. 
 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close