Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஜாமீன் மனு 3-வது தடவை தள்ளுபடி!

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதுசெய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது. 

சுகேஷ்

இரட்டை இலை சின்னத்தைப் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில்,  டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரும் கைதுசெய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், சுகேஷின் ஜாமீன் மறுக்கப்பட்டது.

இதனிடையே, இன்று டெல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் சுகேஷின் ஜாமீன் மனு விசாரணை நடந்தது. அப்போது, அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டது. இதற்கு முன்னர், இரண்டாவது முறை சுகேஷ் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close