Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இடைத் தேர்தலுக்குத் தயாராகவே இருக்கிறோம்!' - சிவ சேனாவுக்கு கிடுக்கிப்பிடி போடும் பட்னாவிஸ்!

மகாராஷ்டிராவில் பா.ஜ.க - சிவசேனா தலைமையிலான அரசு ஆட்சியில் இருக்கும் நிலையில், 'இடைத் தேர்தலுக்கு பா.ஜ.க தயாராகவே உள்ளது' என்று பகீர் கருத்தைக் கூறியுள்ளார் மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்.

Devendra Fadnavis

மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில், விவசாயிகள் தாம் வாங்கிய கடன்களை ரத்துசெய்யக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். போராட்டத்தின் வீச்சு அதிகரித்த நிலையில், கடந்த 11 ஆம் தேதி மாநில முதல்வர் பட்னாவிஸ், 'விவசாயக் கடன்கள் தள்ளுபடிசெய்யப்படுகிறது' என்று அறிவித்தார். 

இந்தப் பிரச்னை நடந்துகொண்டிருந்தபோது சிவசேனா எம்பி ஒருவர், 'விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லையென்றால், மகாராஷ்டிரா அரசுக்கு நாங்கள் கொடுத்துவரும் ஆதரவு திரும்பப் பெறப்படும்' என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலடிகொடுக்கும் வகையில் முதல்வர் பட்னாவிஸ், 'விவசாயிகள் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, சிலர் அரசுக்குக் கொடுத்துவரும் ஆதரவு திரும்பப் பெறப்படும் என்று கூறினர். அவர்கள் விருப்பப்பட்டால், அதைச் செய்யட்டும். இடைத் தேர்தலைச் சந்திக்க பா.ஜ.க தயாராக இருக்கிறது. இடைத் தேர்தல் வந்தால், வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது' என்று பேசியுள்ளார். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close