Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மல்லையாவுக்கு எதிராக 5,000 பக்கங்கள்கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்!

கடன் மோசடியில் சிக்கி, லண்டனில் அடைக்கலம் புகுந்துள்ள விஜய் மல்லையா மீது 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை மும்பை நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளது.

விஜய் மல்லையா

இந்தியாவிலுள்ள பொதுத்துறை வங்கிகளிடமிருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்று, திருப்பிச் செலுத்தாத மல்லையா, இங்கிலாந்தில் அடைக்கலம் புகுந்தார். வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல், இங்கிலாந்துக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையா, ஏப்ரல் மாதம் கைதுசெய்யப்பட்டு, உடனடியாக  ஜாமீனில் வெளிவந்தார். இந்த நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பான வழக்கு, லண்டன் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கில், மல்லையாவைக் கைதுசெய்து இந்தியா அழைத்துவரும் முயற்சியில் சிபிஐ அதிகாரிகள் உள்ளனர்.

லண்டனில் நிலுவையில் உள்ள வழக்கில் இந்தியா சார்பில் கால அவகாசம் கோரப்பட்டுள்ளதால், கடந்த ஆறு மாத காலமாக மல்லையா வழக்கு ஒத்திவைக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், விஜய் மல்லையாவுக்கு எதிராக அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 5,000 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகை, மும்பை நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close