Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு..!

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள், இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டன. 

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பதற்கான நுழைவுத் தேர்வு, மே மாதம் 28 ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். எய்ம்ஸ் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வின் வினாத்தாள் முன்னதாகவே கசிந்துவிட்டதாக, மருத்துவர் வினோத் ராய் என்பவர் குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து எய்ம்ஸ் நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என்றும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை அரசுத் தரப்பு மறுத்தது. இந்த நிலையில், இன்று காலை எய்ம்ஸ் நிர்வாகம், நுழைவுத் தேர்வு முடிவை வெளியிட்டது. தேர்வு முடிவை www.aiimsexams.org என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். முதல்கட்ட கலந்தாய்வில் தேர்வான மாணவ, மாணவிகளுக்கு ஜூலை 3 ஆம் தேதி தொடங்கி ஜூலை 6 வரை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close