Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகிஸ்தானை வாழ்த்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவரின் அறிவுரை!

சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் வென்ற பாகிஸ்தானை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்ட மிர்வாய்ஸ் உமர் ஃபாரூக், பாகிஸ்தானுக்கே சென்றுவிடலாம் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராகேஷ் சின்ஹா கூறியுள்ளார்.

உமர்

நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது பாகிஸ்தான். இதையடுத்து காஷ்மீரில் இருக்கும் பிரிவினைவாத தலைவர் மிர்வாய்ஸ் உமர் ஃபாரூக் பாகிஸ்தானை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டார். இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

 

இதனிடையே உமர் ஃபாரூக்கின் கருத்துக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராகேஷ் சின்ஹா பதிலளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 'உமர் ஃபாரூக் பாகிஸ்தானை உற்சாகப்படுத்துகிறார். நாங்கள் அவர் பாகிஸ்தான் செல்வதை உற்சாகப்படுத்துகிறோம். காஷ்மீரில் இருக்கும் ஒருமைப்பாட்டை சீர்குலைப்பதுதான் இவர்களது நோக்கம். இவர்கள் உயிர் பாகிஸ்தானில்தான் உள்ளது' எனக் கூறியுள்ளார். மற்றொரு ஆர்.எஸ்.எஸ் தலைவரான இந்திரேஷ் குமார், 'மனரீதியாக உமர் ஃபாரூக் ஒரு பாகிஸ்தானியர். அவர் அங்கு செல்ல வேண்டும்' எனக் கூறினார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close