Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ட்ரெண்டிங்கில்' முந்திய தொலைக்காட்சி நிருபர் அனிஷ்!

டலின் பின்னணியில் நின்று கொண்டு, தனியார் தொலைக்காட்சி நிருபர் அனிஷ், செய்திக்காக தனது கருத்தை (Piece to Camera) பதிவு செய்தபோது, ராட்சத அலை எழும்பி, அவரைத் தாக்கிய வீடியோ சமூகவலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அலை தாக்கியபோதும், அசராமல் நின்றுகொண்டு தனது பணியை செவ்வனே நிறைவுசெய்த அந்த நிருபருக்கு பல்வேறு பிரபலங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அனிஷ்

கேரள மாநிலம் ஆலப்புழையில் கடற்கரையோரம் வசித்தவர்களின் வீடுகளை, கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழை மற்றும் ஆர்ப்பரித்து எழும்பிய கடல் அலைகள் அடித்துச் சென்றன. வீடுகளை இழந்தவர்கள் உண்ண உணவின்றி மிகுந்த சிரமத்துக்கு  ஆளானார்கள். அரசு அதிகாரிகள், வீடுகளை இழந்தவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான செய்தியை சேகரிக்க "நியூஸ்-18 கேரளா" தொலைக்காட்சி நிருபர் அனிஷ், ஆலப்புழை கடற்கரைப்பகுதிக்குச் சென்றார். அங்குள்ள பாறைமீது ஏறி கடல் பின்னணியில் அவர் நின்றுகொண்டு, வீடுகளை இழந்தவர்களின் நிலை குறித்த கருத்துகளை ஒளிப்பதிவாளர் உதவியுடன் பதிவு செய்துகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக, திடீரென்று ஆர்ப்பரித்து மேலெழும்பிய ராட்சத அலை, நிருபர் கையில் பிடித்திருந்த குடையை பலமாகத் தாக்கியது. கன்னத்தில் அறைந்தது போன்று திடீர் அதிர்ச்சிக்குள்ளானபோதிலும் அனிஷ் தனது P to C பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து பதிவு செய்து முடித்தார், கடல் அலை அனிஷைத் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மேலும், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் 'ட்ரெண்டிங்' ஆனதுடன், அதனை ஆயிரக்கணக்கானோர் பகிர்வும் செய்துள்ளனர். கடல்அலை தாக்கியநிலையிலும், தொடர்ந்து பேசிய அனிஷின் விடாமுயற்சியுடன் கூடிய கடமை உணர்வை கேரள பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி உள்ளனர். மேலும், ஆலப்புழை மாவட்ட ஆட்சியர் அந்த காட்சிகளைப் பார்த்து, கடற்கரையோரப் பகுதி மக்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்தார். இது, அந்தச் செய்திக்கு கூடுதல் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு செய்தியாளர் என்ன நடந்தாலும், தனது கடமையை தடையின்றி நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு உதாரணமாக விளங்கிய நிருபர் அனிஷை மற்றவர்களுடன் இணைந்து நாமும் பாராட்டுவோம்!

 

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close