Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடியரசுத்தலைவர் தேர்தல்: சோனியாவை சந்தித்தது பாஜக குழு

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

Venkaiah Naidu


இதையொட்டி வருகின்ற, ஜூலை 17 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல், கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுத்தாக்கல் வருகின்ற 28 ஆம் தேதி வரை நடக்கிறது. நேற்றுவரை இதற்காக ஏழு பேர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில் குடியரசுத்தலைவர் தேர்தலையொட்டி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் வெங்கைய நாயுடு ஆகியோர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்துக்குச் சென்றனர்.

குடியரசுத்தலைவர் தேர்தலை முன்னிட்டு நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பி.ஜே.பி வேட்பாளருக்கு, சோனியாவிடம் ஆதரவு கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சோனியாவைச் சந்தித்தப் பிறகு, அ.தி.மு.க எம்.பி-யும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரையும், வெங்கைய நாயுடுவும் சந்தித்துள்ளனர். அப்போது, குடியரசுத் தேர்தலில், அ.தி.மு.க தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று வெங்கைய நாயுடு கோரியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close