Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து தம்பிதுரை புது விளக்கம்!

முதலமைச்சர், மூத்த நிர்வாகிகள் ஆலோசனை செய்து குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 


மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடுவை டெல்லியில் நேரில் சந்தித்துப் பேசினார். தம்பிதுரைக்கு வெங்கைய நாயுடு அழைப்புவிடுத்ததாகக் கூறப்படுகிறது. வெங்கைய நாயுடுவுடனான சந்திப்புக்குப் பிறகு தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 'தெலுங்கு தேசம் கட்சி எம்பி. திவாகர் ரெட்டி விமானநிலையத்தில் நடந்துகொண்ட விவரங்கள் குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் எம்பி-க்கள், அமைச்சர்கள் விமான நிலையங்களில் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெங்கைய நாயுடு எனது நண்பர். அவருடனான சந்திப்பு அரசியல் குறித்தது அல்ல. குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து முதல்வர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை செய்து முடிவு எடுப்பார்கள்' என்று தெரிவித்தார். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close