Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூர்காலாந்துக்காகத் தொடரும் போராட்டம்: டார்ஜிலிங்கில் அதிகரிக்கும் பதற்றம்

டார்ஜிலிங்கில் ‘கூர்காலாந்து’ எனத் தனி மாநிலம் வேண்டி அந்தப் பகுதி மக்கள் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடக்கும் மோதலால் பதற்றம் அதிகரித்து வருகிறது.

கூர்காலாந்து

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில், கூர்க்கா இன மக்கள் அதிகளவில் வசித்துவருகின்றனர். கூர்க்கா இன மக்கள் தனி மாநில உரிமை கேட்டுப் போராடிவருகின்றனர். இதனிடையே போராட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியினர் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என அறிவித்துள்ளனர். காலவரையற்ற போராட்டம், கடையடைப்பு என இருந்துவந்த போரட்டத்தில் நேற்று கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதற்றம் அதிகரித்து வருகிறது.

மேற்குவங்கத்திடமிருந்து டார்ஜிலிங்கைத் தலைமையிடமாகக் கொண்டு கூர்க்காலாந்து என்ற தனி மாநிலம் அமைக்க வேண்டுமென கோரிக்கை வலுத்து வருகிறது. டார்ஜிலிங் வரும் சுற்றுலாப் பயணிகள் இதனால் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகினர். இந்தப் பரபரப்பான சூழலில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் துணை ராணுவப் படையை அனுப்பக்கோரியுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close